வெற்றிலை பாக்கு பயன்பாடு காரணமாகத் தினமும் 9 வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை காரணமாக நாட்டில் தினமும் 3 மரணங்கள் வரையில் பதிவாவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் மத்தியில் இந்த நிலைமை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு நாற்பதாயிரம் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மதுபான ஆணையம் தெரிவித்துள்ளது.





