காட்டு யானைகள் அதிகம் உள்ள
பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள்,
நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேர தொடருந்து போக்குவரத்தின் போது, காட்டு யானைகள் அடிக்கடி மோதுகின்றன.
எனினும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு
உரிய தீர்வு காணத் தவறிதாகக் தெரிவித்தே தொடருந்து சாரதிகள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில்
இயக்கப்படும் சரக்கு தொடருந்துகள் மற்றும் எரிபொருள்கள் தொடருந்துகளின்
சாரதிகளே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.





