தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி மத்திய கல்லூரி நூலகத்தில் "புத்தகம் வாசிப்போம் உலகை வெல்வோம் "என்ற தொனிப்பொருளில் நூலக வாரம் வாசிப்பு தொடர்பாக விழிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளும், போட்டி நிகழ்வுகளும் மாணவர் மற்றும் பாடசாலை ஆளணியினருக்கிடையில் நடாத்தப்பட்டு பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
கல்லூரி முதல்வர் எம்.ஏ.இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் கோறளைப்பற்று மேற்கு ஏ.எம்.எம். தாஹிர் , ஓய்வுபெற்ற அதிபர் வீ.ஏ.ஜுனைட் ஓட்டமாவடி பொது நூலக நூலகர் எம்.சி.சரீப் ஹுசைன், நூலக குழுவினரும், பாடசாலை ஆளணியினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


.jpeg)
.jpeg)

.jpeg)




