மட்டக்களப்பு காட்டுப் பிரதேசத்தில் மரக்கடத்தல் பொலிஸாரால் முறியடிப்பு .

 


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி இரு மாட்டு வண்டிகளில் கடத்திவரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றியை கைப்பற்றினர்.

மட்டக்களப்பு பாவக்கொடிச்சேனை காயங்குடா காட்டுப் பிரதேசத்தில் இந்த மரக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மாட்டு வண்டி கரத்தைகளுடன் இரு சந்தேகநப ர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை வவுணதீவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் ஆத்தியட்சகர் முகமது ஜருளின் வழிகாட்டுதலில் வவுணதீவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. பி. பி டி. சில்வா மேற்கொண்டு வருகின்றார்.