விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளினுடைய தேவைகள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற செயற்குழுவின் கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் 8.7 பேர் இயலாமை உடையவர்களாக காணப்படுகின்றார்கள் இவர்களுடைய தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இவர்களுக்காக வழங்கப்படுகின்ற உதவித்தொகை கொடுப்பனவுகள் 20,000 ரூபாயில் இருக்கின்ற கொடுப்பனவை 50,000 அதிகரிக்கப்பட உள்ளது.
அத்தோடு, பத்து லட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டங்களை மேலும் பத்து லட்சம் ரூபாய் அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் மற்றும் அதேபோல ஏனைய திட்டங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.





