தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் .

 


தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள்  கிடைத்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள்  துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.எத்தகைய சூழ்நிலயிலும், தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.