பாம்பு தீண்டியபோதும் அதனை பொருட் படுத்தாது பரீட்சைக்கு தோற்றிய மாணவன் .

 



பாம்பு தீண்டியபோதும் தமது பரீட்சையை தவிர்க்காது தோற்றிய மாணவன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர், உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய நிலையில், நேற்று பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியுள்ளார். 
 
எனினும் அதனை பொருட் படுத்தாது, அவர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
பின்னர் சிகிச்சைகளுக்கு மத்தியில் நேற்றும் பரீட்சைக்கு தோற்றினார். 
 
அத்துடன், குறித்த மாணவன் இன்று இடம்பெறவுள்ள பரீட்சைக்கு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன், சென்று தோற்றவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அவர், தற்போது மருத்துவ கண்காணிப்பில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.