மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும்
பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி இடப்பட்ட
பதாகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்டுள்ளன.
குறித்த பதாகைகள் பிரதேச சபையின் எவ்வித அனுமதியும் இன்றி நடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஊடகங்களுக்குக்
கருத்து தெரிவித்துள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தினால்,
அடையாளப்படுத்தப்பட்டு இடப்பட்ட இந்த பெயர் பதாகைகள் எந்தவித அனுமதி
இன்றியும் சிலரால் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் நான்கு இடங்களில்
பதிவாகியுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர்
சுனில் செனவி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு
எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அரசாங்கம் உணர்வதாகவும் அமைச்சர் ஹினிதும
சுனில் செனவி சுட்டிக்காட்டியுள்ளார்.





