இராணுவத்தினரின் இன மத மொழி கடந்த மனிதாபிமான சேவை.

 

 


 




 
















 பொதுமக்களுக்கான இடர்கால உலர் உணவுப் பொதிகளை இன்று இராணுவத்தினர்  காயங்கேணி மற்றும் காகித நகர், தியாவட்டவான் மயிலங்கரச்சை பிரதேச வாழ் மக்கள் 100 பேருக்கு  மிகவும் பெறுமதிவாய்ந்த வழங்கி வைத்தனர்
இவ்உலர் உணவு பொதிகளை காயங்கேணியிலுள்ள 30 குடும்பங்களுக்கு  காயங்கேணியிலுள்ள கொரல் கோவ் என்ற இடத்திலும் தியாவட்டவான் ,காகித நகர், மயிலங்கரச்சை போன்ற பிரதேச வாழும் 70 குடும்பங்களுக்கான இவ்உலர் உணவுபொதிகளை காகித நகர் அபூ மண்டபத்திலும் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .

இவ்உலர்உணவு பெறுவதற்கான பயனாளிகளை குறித்த கிராம சேவகர் மூலமாக பொருத்தமான  பயனாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு சென்றடையும் விதமாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவ் உலர் உணவுப் பொதிகள் சகல இனத்தினரிலும் இருந்து தெரிவுசெய்ப்பட்டது சிறப்பம்சமாகும்.

இவ்உலர் உணவு பொதிகளை பயனாளிகளுக்கு  கிழக்கு மாகாண கட்டளை தளபதி Major General  JSBW PalleKumbura    மற்றும் 23 படைப்பிரிவின் கட்டளை தளபதி  Major General GPP.Kulatilaka ஆகியோரும்  கொழும்பு ரோட்டரி கழக தலைவர்  Shervun Fernandopule அவர்களும் Ranjan Amarasinghe, Principal Of  Prima  Baking training center அவர்களும்  Laltih Hijeywardena, Manging Director of Leisure and Beyond  அவர்களும் ஜெம் அன்ட் ஜவலரி உரிமையாளர் Vidura Halwathura அவர்களின் குடும்பமும் ரஸல் உற்பத்தி உரிமையாளர் K .Kusal Perera அவர்களும் வழங்கி வைத்தனர் 
இவ்உலர் உணவுப் பொதிகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் கருத்து தெரிவிக்கையில் மிகுந்த கஸ்டமான நேரத்தில் மழை காலமாக உள்ள படியினால் எமது தொழில்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்உலர் உணவுப் பொதிகள் எமக்கு மிகுந்த பயனிக்கும் என்று குறிப்பிட்டார்கள் அத்துடன் மாற்று த்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் என்பவர்கள் இவ் உலர் உணவுப் பொதிகளை பெறுகின்ற போது கைகளை தூக்கி வணங்கி  பெற்றுக்கொண்டது சகலரினதும் மனதை நெகிழ வைத்தது  

இராணுவத்தினர் தொடர்ச்சியாக இவ்வாறான மனிதாபிமான உதவிகளை இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக செய்து வருவது மக்கள் மத்தியில பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.