மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதியில் சிரமதான பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.











மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் கிராம மக்கள், கிராம அபிவிருத்தி சங்கம் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்தனர். 

வருகின்ற காலம் மழைக்காலம் என்பதனால் மழைநீர் தேங்கி நிக்காது சிறந்த முறையில் வடிந்து ஓடுவதற்காகவும் நுளம்பு பெருக்கங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.