மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த ஏழுபேரும் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.





