மட்டக்களப்பு காத்தான்குடி ஆற்றங்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த முதலையை பிடிக்கும் நடவடிக்கை இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது!

மட்டக்களப்பு காத்தான்குடி ஆற்றங்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த முதலையை பிடிக்கும் நடவடிக்கை இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது!

காத்தான்குடி ஆற்றங்கரை  கரையோரப் பகுதியை அண்மித்த பகுதியில் சமீப நாட்களாக முதலை  நடமாடி வருவதால் 
நீண்ட நாட்களாக மீனவர்களை அச்சுறுத்தி  வந்த முதலையை  கூடு  வைத்து பிடிப்பதற்கான  முயற்சி இன்று மாலை காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் மட்டக்களப்பு வன ஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

முதலை பிடிக்கும்  ஆற்றங்கரை  கள பகுதிக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்   M.L.A.M ஹிஸ்புல்லாஹ் எம்.பி வருகை தந்து பார்வை விட்டார். 

சமீபத்தில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.