அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.
அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள்.
கடந்த
ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால் இப்பிரதேசம் பெரிதும்
பாதிக்கப்பட்டு வருகிறது .கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும்
பலனளிக்கவில்லை.
கடந்த
மூன்று வருட காலத்தில் கரையோரத்தில் இருந்த பாதை அழிக்கப்பட்டு மீனவர்
கட்டிடம் குருகுலம் மற்றும் சிறுவர் இல்ல கட்டிடங்கள் முழுமையாக
சேதமாக்கப்பட்டது.
சித்திர வேலாயுத சுவாமி ஆலய
முன்றலில் பாரிய அரிப்பு ஏற்பட்டு வீதி தொடக்கம் வாடிகள் தென்னைமரங்கள்
கிணறுகள் கடலுக்குள் சங்கமமாகி உள்வாங்கப் பட்டிருக்கின்றன.
சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் நேற்று அங்கு சென்று பார்வையிட்டனர்.
ஆனால்
இந்த திருக்கோவில் ஆலயம் முன்பாக 50 தொடக்கம் 75 மீட்டர் கூட இல்லாத ஒரு
கல்லணையைத் தவிர வேறு எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் நடைபெறவில்லை.
2025
ஆம் ஆண்டில் இப்பொழுது சுமார் மூன்று மீட்டர் நீளம் அளவிலே கடலில்
உள்வாங்கப்பட்டு பல மலசல கூடங்கள் கிணறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
( வி.ரி.சகாதேவராஜா)








