முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சில நாட்களில் வெளியேற உள்ளார்



 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க,
 கொழும்பு 7 இல் ( சுதந்திர அவன்யூ) அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எதிர்வரும் சில நாட்களில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அவர் தமது சில உடைமைகளை அந்த வீட்டில் இருந்து தற்போது வெளியேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து பல முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.