கடுகன்னாவ நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு. - மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



 


பஹல கடுகண்ணாவ பாறை வீழ்ந்த அனர்த்தம் - மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு மாவனல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரில் ஒருவரே உயிரிழந்திருக்கிறார்.
ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த அனர்த்தம் காரணமாக கடுகண்ணாவை வழியான கொழும்பு - கண்டி வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கிறது.
பயணிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்கப்பட்டிருக்கின்றனர்.