""சித்துவிலி சித்தம்"" ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களால் கெளரவம் வழங்கப்பட்டது.









தேசிய ரீதியில் இடம் பெற்ற சித்துவிலி சித்தம்  ஓவியம், சுவர்ஒட்டி, கார்ட்டூன் போட்டியில்  தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின்  தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா றியாஸ் ஒழுங்கமைப்பில் விருது மற்றும் சான்றிதழ்கள் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன. 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் "சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு" எனும் தலைப்பில் ஆண்டு தோறும்  சித்துவிலி சித்தம் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

ஆரம்ப பிரிவு முதல் உயர் தரம் வரையிலான மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டங்களில் இடம் பெற்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசியமட்ட  போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் முகமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாளாவிய ரீதியில் பல்வெறுபட்ட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஏ. பிரபாகர், அதிபர்கள், ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.