துபாயில் திருச்செந்தூர் பாணியிலான சூரசம்ஹாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .
அஜ்மான் இந்தியன் நிறுவன மண்டபத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பக்தி பூர்வமாக நடந்தது .
13
வது கந்த சஷ்டி சுரஷம்ஹாரம் வேதபூஷணம் டாக்டர் சுந்தரேசசர்மா தலைமையில்
விஜய் டிவி புகழ் கலைமாமணி மதுரை கோவிந்தராஜா சங்கீர்த்தனம் துயர்
நடைபெற்றது.
பிரபல முருக கதாப்பிரசங்கி சுமதி ஸ்ரீ சொற்பொழிவு ஆற்றினார் .
துபாயில்
வாழும் பிரபல சமூக செயற்பாட்டாளர் சுந்தரலிங்கம் நகுலன் தம்பதியினர்
உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)










