District Media Unit News-BATTICALOA
வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான “தமது இடம் - அழகான வாழ்க்கை “ என்ற தொனிப்பொருளில் 2025ஆம் ஆண்டின் இறுதிக் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 46 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு
மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 22.11.2025 திகதி இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் டி.பி.சரத் கலந்து கெண்ட நிகழ்வில் விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் சிறப்பு அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதிநிதிகளும் மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மாவட்டத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் நேர்த்தியாக இடம் பெற்றமையினால், அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 10 இலட்சம் பெறுமதியான வீட்டை நிர்மானிப்பதற்காக 46 பயனாளிகள் மேலதிகமாக தெரிவு செய்யப்பட்டு, அதன் முதற் கட்ட கொடுப்பனவாக 150000/= பெறுமதியான காசோலைகள் இன்று பிரதியமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இவ்வாண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 582 வீடுகளை நிர்மானிக்கும் பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.









