ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கற்று பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் க.பொ.த சாதாரண தரம் கற்று சகல பாடங்களிலும் அதி உயர் சித்தியை பெற்ற மாணவர்களுக்குமான பாத்திமியன்ஸ் அதி உயர் விருது வழங்கும்நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல்அஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் எச்.எம்.ஜே நசீபா , தென்கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் விரிவுரையாளர் நுஸ்கியா ஹஸன், இப்பாடசாலையின் முதல் அதிபரும் ஓய்வுபெற்ற வலயக் ஞகல்விப்பணிப்பாளர் எம்.ஜசேகுஅலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் முறைசார் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டும் மாணவர்களுக்கு இவ்விருது இப்பாடசாலையின் சமூகத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட விருக்கின்றது. இவ்விருதினை பெறும் பாத்தியமியன்ஸ்களில் பதிவுகளை தொடர்ச்சியாக இப்பாடசாலை ஆவணப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும்.
இப்பாத்தியமின்ஸ் அதி உயர் விருதினை முதற்தடவையாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல் அஸ்கர் தலைமை உரையில் பாடசாலையின் தேவைகள் குறித்தும் பாடசாலை எதிர்காலத்தில் அடையவிருக்கும் இலக்குகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். அதனை தொடர்ந்து உரையாற்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு எதிர்காலத்தில் புதிய கல்வி கொள்கைகளுக்கு அமைவாக பாடசாலை நவீன கல்வி உபகரணங்களுடன் அபிவிருத்தி பாதை ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவதற்கு அரசாங்கம் மிகுந்த கர்சனை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார் .
ஆதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகர உரையில் கல்வியை கற்று முன்னேறிய முறை தொடர்பாகவும் கல்வியிலுள்ள மூன்று படித்தரங்களில் அறிவு திறன் மனப்பாங்கு வளர்ச்சியில் மாற்றங்களை கொண்டு வருவதின் ஊடாக பாடசாலை மாணவர்கள் சமூகத்தில் நற்பிரசைகளாக வர முடியும் என்றும் இப்பாடசாலை தொடர்பாக கர்சனை கொண்டு எதிர்காலத்தில் கல்வி துறையினரோடு கலந்துரையாடி இப்பாடசாலையிலுள்ள விடயங்களை பூர்த்தி செய்வதற்கு தன்னால் முடியுமான உதவிகளை செய்வேன் என்று குறிப்பிட்டார்
இதன்போது மாணவர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரகேற்றப்பட்டது .
ந.குகதர்சன்
.jpeg)


.jpeg)
.jpeg)





