அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல் கட்டமாக, நாடு தழுவிய சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியசமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவைஇவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது.

 



