சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 5
வயது சிறுமிக்கு 65 வயதுடைய முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக
சிறுமியின் தாயார் கடந்த ஆண்டு முறைப்பாடளித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை நீதிமன்ற நீதிபதி பத்மா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இந்திய மதிப்பில் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.





