நாளை மட்டக்களப்பு மற்றும் 4 இடங்களில் உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினம் .

 


உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை நாட்டின் ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
எனவே, அன்றைய தினம் ஆழிப்பேரலை குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
 
யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்படும் இந்த பயிற்சி திட்டத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
பிரதான தேசிய பயிற்சி காலை 8:30 அளவில் களுத்துறை மாவட்டத்தில் தொடங்கும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.