கொக்கட்டிச்சோலையில் 3000 திருமந்திர முற்றோதலுடன் சிறப்பாக இடம்பெற்ற திருமூலரின் குருபூஜை

 
















 வரலாற்று பிரசித்தி பெற்ற  கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவபூமி திருமந்திர அரண்மனையில்  3000 திருமந்திர முற்றோதலுடன்  திருமூலரின் குருபூஜை
 நேற்று  (04) செவ்வாய்க்கிழமை  ஆலயத் தலைவர் இ.மேகராசா தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது. 

ஆலய  குருக்களான சிவஸ்ரீ மு. கு.அமிர்தலிங்கம் , சிவஸ்ரீ வ. ஜோதிலிங்க குருக்கள் ஆகியோரின் கிரியைகளுடன் திருமூலர் குருபூஜை நடைபெற்றது.

கடந்த மூன்று தினங்களாக திருமூலர் அருளிய திருமந்திரம் மற்றும் மணிவாசகர் அருளிய திருவாசகம் என்பனவற்றின் முற்றோதல் இடம்பெற்றது. ஆலய குரு சிவஸ்ரீ சபாரெத்தினக்குருக்கள் தலைமையில் இம் முற்றோதல் இடம்பெற்றது.

 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய சைவ ஆன்மீக விருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் 
ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்களான இ
. மேகராசா( தலைவர் ), சி.கங்காதரன்( செயலாளர் ),ச. கோகுலகிருஷ்ணன் ( பொருளாளர்) உள்ளிட்ட பரிபாலன சபையினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இரவில் சிவபூமி திருமந்திர அரண்மனை ஜெகஜோதியாக காட்சியளித்தது.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)