கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயது இளம்பெண் அஸ்வதி அச்சு
(Aswathy Achu), ஆண்களை ‘ஹனிடிராப்’ (honey trap) முறையில் 300-க்கும்
மேற்பட்ட தாத்தாக்களை ஏமாற்றி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான
ரூபாய் சம்பாதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பொலிஸ்
அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களை குறிவைத்து இந்தத்
தந்திரங்களை நடத்தியவர், கடந்த 2.5 ஆண்டுகளுக்கு மேல் பொலிஸ் வட்டங்களில்
செல்வாக்கு கொண்டு தப்பிக்க வெற்றி பெற்றார்.
இந்த வாரத்தில், அவரது
சமீபத்திய ஏமாற்று வழக்கில் பொலிஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம், கேரளாவின் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வதி அச்சுவின் சமீபத்திய
பலியாகியவர், திருவனந்தபுரம் அருகே உள்ள போவார் (Poovar) பகுதியைச் சேர்ந்த
68 வயது ஓய்வூதியர். தனது மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்த இந்த
முதியவருக்கு, திருமணப் புரோக்கர்கள் மூலம் அஸ்வதியை அறிமுகப்படுத்தினர்.





