இலங்கையின் தென் மேற்கில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வளிமண்டல சுழற்சி மேற்குத் திசை நோக்கி நகர்ந்து, காலியில் இருந்து 161 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் நிலை கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு 26.11.2025 அன்று வலுப்பெற்று கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்து, பின்னர் கிழக்குக் கரையை அண்மிக்கும் போது சிறு புயலாக மாறக்கூடும்.
தென், மத்திய, சபரகமுவா, மேல், ஊவா மாகாணங்கள் – 25 நவம்பர் முதல் கனமழை. வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் – 27 நவம்பர் முதல் மழை அதிகரிப்பு.
இந்தோனேசியா பண்டா ஆச்சே அருகே தோன்றிய தாழமுக்கம் 26 ஆம் திகதி புயலாக வலுப்பெறும். இதனுடன் சேர்த்து வங்காள விரிகுடாவில் இரண்டு தாழமுக்கங்கள் ஒரே நேரத்தில் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
29 நவம்பர் அன்று இவை இரண்டும் ஒரே அளவிற்கு வலுப்பெறும் என மாதிரிகள் காட்டுவதால், இலங்கைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் என பேராசிரியர் எச்சரித்தார்.
தென், மேற்கு, சபரகமுவா, மத்திய, ஊவா மாகாணங்களில் ஏற்கனவே அபாயத்தில் உள்ளன
வெள்ளம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், வரவிருக்கும் நாட்களில் மேலும் அபாயம் அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகள் 23 முதல் 29 நவம்பர் வரை கடுமையாக கொந்தளிப்பாக இருக்கும். மீனவர்கள் இந்த காலத்தில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.
25 நவம்பர் முதல் 2 டிசம்பர் வரை இலங்கையில் கனமழை, வெள்ளம், பலத்த காற்று போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடியதால், மக்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் பிரதீபராஜா கூறினார்.





