இந்த வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் தா கூறப்படுவது தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.





