2025 வருடத்தில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் 230 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிட்டுள்ளது.
 
பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் மீட்பு முயற்சிகள் காரணமாக, அதே காலகட்டத்தில் 195 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
 
காப்பாற்றப்பட்டவர்களில் 135 பேர் இலங்கையர்கள் என்றும் 60 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும், நேற்று முன்தினம் சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்தபோது, கிரிபத்கொட - மாகொலையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.