கன்னியாகுமரி மாவட்டம் ஆனையடியில் வசித்து வரும் மணிகண்டன் விஜயகுமாரி ஆகியோரின் 10 வயது மகள் அக்சயா. இவர் சான்ஜோ ஆங்கிலப் பள்ளியில் கல்வி கற்று வருகிறார். இவர் ப்ரொன்ட் ஸ்பிரிங் முறையில் ஒரு மணிநேரத்தில் 201 ஓடுகளை தனது தலையால் உடைத்து சோழன் உலக சாதனை படைத்தார்.
வழக்கமாக ஓடுகளை கைகளால்,நெற்றியால், முழங்கையால், முழங்காலால் மற்றும் கால்களால் உடைத்து கராத்தே வீரர்கள் சாதனை படைப்பார்கள். ஆனால், உலகில் முதல் முறையாக ப்ரொன்ட் ஸ்பிரிங் முறையில் இத்தனை ஒடுகளை உடைத்தது இதுவே முதல் முறை என மாணவியின் கராத்தே பயிற்சி ஆசிரியரும் ரெட் டிராகன் கராத்தே அமைப்பின் ஆசிரியர் டொமினிக் கூறுனார்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அதேவேளை, பள்ளி நிர்வாகத்தினால் மிதிவண்டி ஒன்றும் அவரது பயிற்சி ஆசிரியரினால் தங்க மோதிரமும் வழங்கப்பட்டது.




