புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல, 200க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை.

 


புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை என்றும் கல்வி,உயர் கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மறு சீரமைப்பு தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய;

அரசாங்கமானது குறுகிய கால பயன்கள் அன்றி நீண்ட கால பிரதிபலனைக் கொண்ட கல்வி முறையையே நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. பாடவிதான பரிந்துரைகளை மாற்றுவது மட்டுமின்றி முழுமையான கல்வியிலும் சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டு வரும் கல்வி மறுசீரமைப்பாகவே இந்த கல்வி மறுசீரமைப்பு அமையும். இதன் பிரதிபலன்கள் குறுகிய காலத்திற்குள் அன்றி பத்து வருட காலத்திற்குள் எதிர்பார்க்கப்படுவதாகும்.கடந்த அரசாங்க காலங்களில் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பின் நீடிப்பு அல்லாமல், தற்போதைய அரசாங்கம், கல்வியின் காரணமாக மக்களுக்கு இழக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே இந்த மறு சீரமைப்பை முன்னெடுக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.