இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள சிவப்பு
எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்களில் 80 பேர் பாரிய குற்றச் செயல்களில்
ஈடுபட்ட, திட்டமிட்ட குற்றக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர்
கூறினார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில்
தங்கியுள்ள குற்றக் குழு உறுப்பினர்களில் பலர் அந்தந்த நாடுகளில் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சுற்றுலா சென்றுள்ள போர்வையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





