பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

 


பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த மனு  எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
இதன்போது, குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளது. 
 
தாம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமான செயல் என உத்தரவிடக்கோரி, பிள்ளையானால் குறித்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்ட விதம், தடுத்து வைக்கப்பட்டுள்ள முறைமை ஆகியன தவறான செயல்கள் எனவும் மனுதாரர் மன்றுக்கு அறிவித்துள்ளார்.