தாய்லாந்து - மலேசியா
எல்லைக்கு அருகே மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளானவர்களை மீட்க மலேசியாவும் தாய்லாந்தும் கூட்டு தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
விபத்தில் இதுவரை, 11 உடலங்கள்
மீட்கப்பட்டுள்ளன, மேலும் விபத்து நடந்த நேரத்தில் படகில் கிட்டத்தட்ட 70
பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படகிலிருந்த 13 பயணிகள் உயிர் பிழைத்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், கிட்டத்தட்ட 230
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகு குறித்தும் எந்த தகவலும்
இதுவரை வெளியாகவில்லை என்று மலேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.





