இன்று பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது பிறந்தநாள் (நவம்பர் 23, 2025)

 

 

 உலகின் தலைசிறந்த ஆன்மீக குருமார்களில் ஒருவராக கருதப்படுபவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. தெய்வீக அவதாரமாக கருதப்படும் சத்ய சாயி பாபா, மனிதகுலத்திற்கு ஆற்றிய சேவைகள், அன்பு மற்றும் கருணையை உணர்த்தும் போதைகளால் உலகம் முழுவதிலும் உள்ள பல லட்சக்கணக்கானவர்களின் மனங்களில் இன்றும் இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

 ஸ்ரீ சத்ய சாயி பாபாவின்வின்   100வது பிறந்தநாள் (நவம்பர் 23, 2025) ,  முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது அன்பு, சேவை மற்றும் ஆன்மீக மாற்றத்தின் நீடித்த பாரம்பரியத்தை நினைவு கூர்கின்றனர். வழிகாட்டியாகவும், பாதுகாவலராகவும், அன்பின் சக்தியை நினைவூட்டுபவராகவும் அவர் விளங்குகிறார்.

 அன்பு, உண்மை, தர்மம் (சரியான நடத்தை), சாந்தி (அமைதி) மற்றும் அகிம்சை (வன்முறையின்மை) ஆகியவற்றை உள்ளடக்கிய அவரது வாழ்க்கை மற்றும் போதனைகளால், 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அவர் உலகெங்கிலும்  ஒரு ஆன்மீக குருவாகப் போற்றப்படுகிறார்

ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் தன்னலமற்ற சேவை, அனைத்து மதங்களின் ஒற்றுமை மற்றும் ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் தெய்வீகம் குடி கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை வலியுறுத்தினார். அவரது இந்தச் சேவைப்பணி, சாயி அமைப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமானத் திட்டங்களின் உலகளாவிய வலையமைப்பின் மூலம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

 பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, நவம்பர் 23, 1926 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது 14வது வயதில், அவர் தனது தெய்வீகப் பணியைத் தொடங்கினார். ஸ்ரீ சத்ய சாய் பாபா அனைத்து மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார் மற்றும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அஹிம்சை ஆகிய மனித வாழ்க்கையில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நியமங்களை போதித்தார். அவரது எளிய ஆனால் ஆழமான போதனைகளில், "அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், அனைவருக்கும் சேவை செய்யுங்கள்" மற்றும் "எப்போதும் உதவுங்கள், ஒரு போதும் காயப்படுத்தாதீர்கள்" என்ற குறிக்கோள்கள் அடங்கும்.

 பல மில்லியன் மக்கள் பயனடைய, இலவச மருத்துவமனைகள், இலவச கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரமாண்டமான குடிநீர் திட்டங்கள் போன்ற பல தொண்டு நடவடிக்கைகளை அவர் தொடங்கினார். ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்காக பாபாவின் இதயம் எப்போதும் உருகியது. ஸ்ரீ சத்ய சாய் அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் தெய்வீக அவதாரமாக மதிக்கப்படுகிறார். அவரது தெய்வீக போதனைகள், தங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழியைக் கண்டறிந்த பலரைத் தொட்டு, ஊக்கப்படுத்தி, வழிநடத்திக் கொண்டிருக்கிறது. 

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகாசமாதிக்குப் பிறகும், அவரது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அவரது போதனைகளைப் தொடர்ந்து கடைப்பிடித்து, சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிக்கின்றனர். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் ஆகியவை பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களால் தொடங்கப்பட்ட பணியைத் தொடர்ந்து நடத்துகின்றன. மேலும் அவரது தன்னலமற்ற அன்பும், உலகளாவிய ஆன்மீகப் போதனைகளும் மில்லியன் கணக்கானவர்களை சமூக சேவைப் பாதையில் ஊக்கப்படுத்தியுள்ளன.