
சுற்றாடல் அமைச்சினால் உலக சுற்றுசூழல் தினத்தின் நோக்கத்தை அடிப்படையாக
கொண்டு நாடு பூராகவும் பாடசாலை மாணவர்களை அறிவூட்டும் நிகழ்ச்சி
திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில் மண்முனை தென்
எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சுற்றாடல்
முன்னோடி கழக மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வானது இன்றைய தினம்
(09.10.2025) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனையின்
கீழும், மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர்
எம். சபேஷ்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் மட்/பட்/பட்டிருப்பு
மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் அர்ச்சனா
நிஷாந்தன் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட உத்தியோகத்தர்
நா.கோகுலதாஸ் ஆகியோரினால் "பிளாஸ்டிக் காரணமாக ஏற்படக்கூடிய மாசாக்கத்தை
நிறைவு செய்வோம்" (Ending Plastic Pollution) எனும் தலைப்பில்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில்
இடம்பெற்றது.
🟢 அத்துடன் எஸ். நிலக்க்ஷி (Selah Enterprises Pvt
Ltd) அவர்களினால் பிளாஸ்டிக் பொருட்களை மீள் பாவணைக்குட்படுத்தி கைப்பணி
பொருட்கள் உருவாக்கும் நிகழ்வும் மாணவர்களுக்கு செயற்பாடு மூலம்
காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ரி.
ஜனேந்திரராசா, சுற்றாடல் முன்னோடி கழக பொறுப்பாசிரியர் எம். சுகிர்தராசா,
பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என
பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், இந் நிகழ்வினை பிரதேச செயலக சுற்றாடல்
அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். கோகுலவேணி ஒழுங்கு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




