சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்லடி BONNINGTON பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி LUKE, தலைமையில் சிறுவர் கண்காட்சி இடம் பெற்றது .
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணியக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் பிரதம அதிதியாகவும் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு திருச்செல்வம் மேகராஜ், முன் கல்வி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் எஸ் பரணிதரன் மற்றும் ஓய்வுநிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
BONNINGTON பாலர் பாடசாலை சிறார்களின் அறிவு மற்றும் ஆக்கத்திறனை வெளிப்படுத்தவும், ஆளுமையை மேம்படுத்தவும் அத்துடன் பொது அறிவை விருத்தி செய்யும் முகமாக அறிவியல் சார்ந்த கைவினை பொருட் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
67 சிறார்கள் தங்கள் கைவினை பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பிரதேசவாழ் பொதுமக்கள் என பலரும் வருகை தந்து கண்காட்சியில் பார்வையிட்டனர் .
நிகழ்வுகளின் நிறைவில் கண்காட்சியில் பங்கேற்றிருந்த சிறார்கள் அனைவருக்கும் கலந்துகொண்ட அத்திதிகளால் நினைவுப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. .
EDITOR
,