விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
















கொழும்பு  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்  மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்தி  பயிற்சி நெறி நடைபெற்றது.

ஐப்பசி 25ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையாக 04 நாட்களில் முதலாவது நாள் தைக்வோன்டோ(Takewondo) விளையாட்டு தொடர்பான பயிற்சியும் இரண்டாம் நாள் தடகள(Athletic) விளையாட்டுக்கான பயிற்சிகளும் மூன்றாம் நாள் கபடி விளையாட்டுக்கான பயிற்சிகளும் நான்காம் நாள் பளு தூக்குதல் (weight lifting) விளையாட்டுக்கான பயிற்சியும் நடைபெற்றது.

இதன் போது இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயிலுனர்கள்  பல்வேறு பட்ட  விடயங்களை முன்வைத்ததில் அதிகளவான நேரம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஒரு சில விளையாட்டுக்கள் மாத்திரம் இன்றி அனைத்து விளையாட்டுகளுக்குமான நீண்ட நாள் பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், ஏற்பாட்டுக் குழுவினரிடம் இதன் போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான கட்டட தொகுதியில் நடைபெற்றதுடன், திறன் விருத்தி பயிற்சி நெறியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் P. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்ட செயலாளர் G.பிரணவன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.Y.ஆதம்,  தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவன விரிவுரையாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஜீ.எல்.சஜித் ஜயலால், ஆர்.டி.ஏ.ஜீவானந்த, கே.எச்.கின்ஸ்லி குணதிலக, ஆர்.பி.பி.பிரசண்ண, எம்.ரொமேஸ் ரத்னசேகர, எம்.எல்.எம்.சஜ்னாஸ், மற்றும் எச்.ஏ.கலபனி ஆகியோர் கலந்து கொண்டதுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.