மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது











கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின் காரியாலயம் அகற்றுவதை எதிர்த்து இன்று 09.10.2025   வியாழக்கிழமை  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலையங்களின் முன்பள்ளி ஆசிரியர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

சம்பளம் வெறும் 6000 ரூபாய் தான், இப்படியிருக்கையில் திருகோணமலைக்கு போய் அலைக்கழிய எம்மால் முடியாது ஜனாதிபதி" அவர்களே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் வேண்டாம் வேண்டாம்" எமது பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தை இடம் மாற்றாதே, தாருங்கள் "தாருங்கள் எங்கள் காரியாலயத்தை எங்களிடமே தாருங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு  குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் இது தொடர்பிலான மஹஜர் அடங்கிய கடிதம் ஒன்றும் அரசாங்க அதிபர் ஊடாக  ஆளுநருக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக  குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.