நாடளாவிய ரீதியில் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு .

 


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. 

குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளது. 

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அந்த சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அத்துடன் எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்தில் தங்களுக்கான அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வினை முன்வைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.