மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் கழிவு முகாமைத்துவம்,கழிவுகளை குறைத்தல் தொடர்பான பயிற்சி பாசறை .

 

 

















 மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி R.முரளீஸ்வரரின் பணிப்புரைக்கமைய,பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி மோகனகுமார் தலைமையில்28.10.2025 இடம்பெற்றது.

இதில் அனைத்து ஆதார வைத்தியசாலைகள், பிரதேச வைத்தியசாலைகள், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.கழிவு முகாமைத்துவத்தின் முக்கியத்துவம், சுகாதார உத்தியோகத்தர்களின் பொறுப்புகள் பற்றி பிரதிப் பணிப்பாளரினால் கூறப்பட்டது.கழிவுகளின்அடிப்படை பிரித்தெடுப்பின் முக்கியத்துவம், பொருத்தமற்ற பிரித்தெடுப்பின் விளைவுகள், சூழலில்  இவற்றின் பாதகமான தாக்கங்கள் பற்றி  மட்டக்களப்பு சுற்றாடல் அதிகாரசபை ,சுற்றாடல் அதிகாரி காயத்திரி சிறிவித்தியனினால்   கலந்துரையாடப்பட்டது.  

 வைத்தியசாலைகளினால் எதிர் நோக்கப்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான உத்திகளும் பிராந்திய பணிமனையின் தரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி J. சகாயதர்ஷினி அவர்களினால் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வினை பிராந்திய சுகாதார பணிமனையின் தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைத்து நடத்தியமை குறிப்பிடத் தக்கது.