மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கும்  உள ஆரோக்கிய வளர்ச்சிக்கும்  முக்கிய வழிகாட்டியாக செயற்பட்டுக் கொண்டு இருக்கும்  ஆசிரியர்கள் உங்கள் சேவைக்கு வலிமை சேர்க்கும் உளவியல் கல்வியை நீங்கள் பெற்றிருப்பது  அவசியமாகும். 
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட. விரிவுரையாளரும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்ரும், உளசமூக வலுவூட்டல் வளவாளருமான திரு.S. பிரான்சிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் பாடசாலையின் அதிபர் திரு. S. பிரான்சிஸ் தலைமையில் பிரதி அதிபர் திரு. K. லோகேஸ்வரன் மற்றும் உளவளத்துணைக்கு பொறுப்பான ஆசிரியை திருமதி. றோகினி மோகனராஜா  ஆகியோரின் பங்கேற்றலுடன் ஆசிரியர்களுக்கு உளவியல்  விழிப்புணர்வு செயற்பாடு ஒன்று மேற்படி பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (30.11.2025) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டு தாமும் மகிழ்ச்சியாக இருந்து   மாணவர்களின் மனநிலை உணர்வுகளையும் புரிந்து  அவர்களையும் உள நலமுடைய கற்றல் நல்வாழ்வுக்கு  உட்படுத்துவது  சிப்பான செயற்பாடாகும்.
 இன்றைய சூழலில்  பாடசாலைகளில் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும்  மன அழுத்தம், கவலை, சோர்வு போன்ற பிரச்சனைகள்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுது வருகின்ர்.
இவ்வாறான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே  அடையாளம் காண்பதற்கு ஆசிரியருக்கு உளவியல் அறிவு தேவையாக உள்ளது என்பதை அதிகரித்துவரும் மாணவர் மன நலப் பிரச்சினைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
உளவியல் கல்வியை முறையாக பெற்ற ஆசிரியர்கள் சரியான திட்டமிடலின் (Planning) கீழ் ஆரோக்கியமான முறையில் செயற்படுவர். மாறாக திடீரென கோபப்படவோ , கடும் சொற்களைப் பேசவோ  மாட்டார்கள். பதற்ற 
நிலைகளில் அமைதியாக செயல்பட கற்றுக் கொள்வதுடன் மாணவர்களின் நடத்தை மாற்றங்களையும் சரியாக  உணர்ந்து கொள்வார்கள்.
அத்தோடு மனநலம் குறைபாட்டில் உள்ள மாணவர்களுக்கு உடனடியாக உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டு  ஆதரவு வழங்க  ஆர்வமாகவும் இருப்பார்கள் என்றார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் 
மனிதர்களாகிய அனைவருக்கும் மன அழுத்தம்  பொதுவாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த மிதமான மன அழுத்தமே  எம் உணர்வை தூண்டி எம்மை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்கின்றது  இந்த மிதமான மன அழுத்தமே அதிகரித்து  எமக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி விடுவததுடன் மனநல சிகிச்சை  பெறவேண்டிய  நிலைக்கும்  எம்மை உள்ளாக்கி விடுகின்றது.
எனவே மாணவர்களின் மன அழுத்தப் பிரச்சினைக்கு  வழிகாட்டும் போது  அடைவு மட்டத்தில் மாத்திரம் நாம் கருசனை காட்டிவிடாது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகரித்த மன அழுத்தப் பிரச்சினைகளுடன் உள்ளார்களா என்பதிலும் கருசனை காட்டப்படல் வேண்டும்.
 ஏனென்றால்  மாணவர்கள் குடும்பச் சூழ்நிலைகளாலும்,  கல்வி முறைமைகளாலும், சமூகச் சூழலினாலும்  பெரிதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வரும் நிலை அதிகரித்துள்ளது.
அதை கவனிக்க உணர்வுப் புத்திசாலித்தன்மை  ஆசிரியர்களாகிய உங்களுக்கு தேவையாக உள்ளது. அதற்கு உளவியல் அறிவு  அவசியம்
உளவியல் அனுகுமுறை  புரிதல் ஆசிரியர்களுக்கு இருந்தால்  மாணவர்களை தண்டிக்காமல் சிறப்பான முறையில் வழிகாட்ட முடியும்.  
 சில வேளைகளில் ஆசிரியரின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மாணவர்களின் மனதில் நீண்டகால தாக்கம் ஏற்படுத்தக் கூடியவையாக மாறிவிடுவதும் உண்டு. இவ்வாறான நிலையில்   மாணவர்கள் பயம் கொண்டு தொடர்ச்சியாக உணர்வுகளை அடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு  மன அழுத்தத்தை பிறழ்வாக வெளிக்காட்டும் நிலையும் ஏள்படும் என கூறினார்.
மேலும் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
உவியல் அறிவை பெறுவதன் மூலம்  உணர்வுகளை புரிந்து பேசும் தன்மையை வளர்த்துக் கொள்வதற்கு  அதிகம் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன அது மாத்திரமல்லாது மனநல கல்வியானது ஒவ்வொரு  ஆசிரியர்களையும்  நல்ல. உளவளத்துணையாளராகவும் மாற்றிவிடுகின்றது
இந்த அறிவை பெறுவதன் மூலம் மனநல குறைபாடு என்பது ஒரு நோய் ஆனால்  அது தவறு அல்ல என்பதை  மாணவர்களுக்குக்கும் பெற்றோருக்கும் தெளிவுபடுத்த முடிவதுடன்
மனநலத்தை எடுத்துரைக்கும் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கைச்  சின்னமாகவும் இருப்பார்கள்.
மாறாக மனநலம் பற்றி அறிந்திராத ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு உந்துசக்தியாக செயற்பட முடியாமல் போவதுடன் ஏனையோருக்கும் இடையூறாக காணப்படுவர்.
மன அழுத்தத்தில் தவிக்கும் ஆசிரியர் கற்றல் சூழலை அழித்து விடுவதுடன்  தன்னம்பிக்கை, மன அமைதி சுய கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி,தொடர்பாடல்,நேர முகாமைத்துவம் போன்றவற்றில் அசாதாரன. செயற்பாடுகளை தொடர்ச்சியாக வெளிக்காட்டக்கூடியவர்களாகவும் அதிக கோபம் கொண்ட. உணர்வுடனும் இருப்பர்.
இப்படியான அசாதாரன செயற்பாடுகளைக் கொண்வர்கள் தவறான முடிவுகளை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தை  நாம் அறிந்திராமலும் இல்லை.
 ஆசிரியர்கள் நேரான எண்ணம் கொண்ட மனநிலையுடன் இருந்து
மாணவர்களின் உணர்வுகளை மதிக்கும்போது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு நீங்கள் வழங்குவது போன்ற உணர்வை அவர்கள் பெற்றுக் கொள்வதுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல உறவும் காணப்படும்.
ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களும் தனித்துவம் கொண்டவர்கள் என்பதை உளவியல்  அறிவு மூலம் நாம் தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் ஒரு நபரின் செயல் திறனை குறைக்கும்.  அதை கையாள கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்
மாணவர் ஒழுக்கம் தொடர்பான பிரச்சனைகளும் மனநல சிக்கல்களாக இருக்கலாம்.  
 அவற்றை தீர்க்க மனநலக் கல்வி அவர்ளுக்கு அவசியமாகும் அதேபோன்று ஆசிரியர்களுக்கும் அவசியமாகும்.
மனநலம் என்பது தனிப்பட்டது மட்டுமல்ல உடல்,உளம்,சமூகம், ஆன்மீகம்,அறிவு போன்வற்றின் சேர்க்கையாகவே உள்ளது. 
எனவே, உளவியல்  கல்வியை பாடசாலை சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என. அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் MIU பல்கலைக்கழகத்தின்  வளவாளர் பயிற்சி பெறும்  மாணவர்களினால்   எவ்வாறு " கொதிக்கும் மனமும் கற்பிக்கும் நெஞ்சமும்" எனும் தலைப்பில் கோப உணர்வுகளை  ககையாழும் அனுகுமுறையை உணர்த்தும் சிறிய நாடகமும் இடம் பெற்றதுடன் ஆசிரியர்களின் பல்வேறுபட்ட உளவியல் கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டது.
 
















 
 




 
 
 
 
.jpeg) 
