மலேரியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களுக்குமான விசேட பயிற்சி கருத்தரங்கு .

 

 

 

 

 

 















 






 மலேரியா மீள்வருகையை  கட்டுப்படுத்தும் நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் கடமையாற்றும் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களுக்குமான விசேட பயிற்சி கருத்தரங்கு  10. 10.2025  திகதி இன்று பிராந்திய சுகாதார பணிப்பாளர்  பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள்.
மலேரியா நோயின் கடந்த கால வரலாறு, அதன் உக்கிர தன்மை, மலேரியா அற்ற நாடு என்று சான்றிதழ் பெறப்பட்ட விதம் ,
பிற நாடுகளில் மலேரியாவின் தாக்கம், பூகோள ரீதியில் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம்.
 பூச்சியியல் ஆய்வின் முக்கியத்துவம். மலேரியாவை பரப்பும்  நுளம்புகள் பெருகக் கூடிய சூழ்நிலைகள், மலேரியாவின் பரம்பல் பற்றிய விஞ்ஞான பூர்வமான சான்றுகள்,
 ஒருவருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டால்  எவ்வாறான முறைகளை பின்பற்றுதல், காய்ச்சல் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாத தன்மைகள் , 
எம்மிடம் இருக்கும் மலேரியா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை எவ்வாறு அணுகுவது போன்ற விடயங்களும்   மலேரியா உள்ள நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு சென்று மீண்டும் உள்நாட்டுக்கு திரும்புவர்களை எவ்வாறு இலகுவாக கண்காணிப்பது தொடர்பாகவும…
இவ் பயிற்சியினை மாவட்டத்துக்கு பொறுப்பான மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எம்.அச்சுதன் தலைமை தாங்கி நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.