சுற்றுலா பிரதேசமாக விளங்கும் பாசிக்குடா அனிலானா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பற்றைக்காடுகள் தனியார் தென்னந் தோப்புகளில் திடீரென தீப்பற்றியது.

 

 





  




 சுற்றுலா பிரதேசமாக விளங்கும் பாசிக்குடா அனிலானா ஹோட்டலுக்கு அருகிலுள்ள பற்றைக்காடுகள் தனியார் தென்னந் தோப்புகளில் திடீரென தீப்பற்றியது. 

தகவல் அறிந்து சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன்  மற்றும் உப தொழிலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சபை தண்ணீர் வௌசர். ஓட்டமாவடி சபை வௌசர் மாநகர சபை தீயணைக்கும இயந்திரம் கொண்டு தீயினை கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இராணுவத்தினரும் பங்களிப்பு செய்திருந்தனர். கோறளைப்பற்று பிரதேச சபை தொழிலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் சுற்றுலா விடுதி மேலாளர் மாகீர்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தீயணைப்பு இயந்திரம் இல்லை. இதனால் இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சிரமமாகவுள்ளதாகவும் மட்டக்களப்பில் இருந்தே வரும் வரையில் காத்திருக்கும் நிலை உள்ளதாக தொழிலாளர் கவலை தெரிவித்துள்ளனர்.