கல்வி
அமைச்சினால் நடைமுறைபடுத்தபட்டுவரும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 - 17)
முன்னிட்டு கல்முனை பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் பாடசாலை அதிபர்
கே.அருண்குமார் தலைமையில் மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சி
நேற்று (17) நடைபெற்றது.
அங்கு
கற்கின்ற மாணவர்களும் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களதும் உள சுகாதார
முக்கியத்துவத்தையும், நலனையும் மேம்படுத்துவதற்கான. மூச்சுப் பயிற்சி,
மற்றும் தியான பயிற்சி ஆகியவற்றை. எமது வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு
நிலையத்தினால். நிலையத்தின். தியான பயிற்சிவிப்பாளர். சிசுபாலனால்
தியானம்,மூச்சுபயிற்சி,உளநல ஆன்மீக தெளிவுரைகள் என்பன வழங்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர்,பிரதிஅதிபர்ஆசிரியர்கள், மாணவர்கள்,
பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொண்டதுடன் வள்ளலார் வல்லவர் உள்ளொளி
நேசிப்பு மையத்தின் ஸ்தாபகர் தவத்திரு புண்ணியமலர் அம்மா,ஆன்மீக இணைப்பாளர்
என்.சௌவியதாசன்,ஆலோசகர்,தொண்டர் கள் ஆகியோரும் கலந்து நிகழ்வை நெறிப்படுத்தினர்.
( வி.ரி.சகாதேவராஜா)