மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் விவசாயி மீது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்ல ரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த விவசாயி செவ்வாய்க்கிழமை (14) முற்பகல் 11.00 மணிக்கு வயலில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது வீதியில் உயிரிழந்ததையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.