பாரிஸ் ஃபேஷன் வீக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண் ஒருவர் முதல் முறையாக வடிவமைப்பாளராக கலந்துகொண்டு வரலாறு படைத்துள்ளார்.
அனயா சேகரிப்பின் நிறுவனர் மற்றும் கலை இயக்குநரான இலங்கை வடிவமைப்பாளர் சதுரி சமரவீர என்பவர் தனது தொகுப்பை காட்சிப்படுத்திய முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
பாரிஸில் உள்ள ஹோட்டல் லு மரோயிஸில் நடைபெற்ற அதிகாரபூர்வ நிகழ்வில், சமரவீராவின் வசந்த/கோடை 2026 தொகுப்பான "பலேரிக் ட்ரீமிங்" ஐ காட்சிப்படுத்தியுள்ளார்.
பலேரிக் தீவுகளின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட இந்தத் தொகுப்பில் மென்மையான நீலம், ரோஜா-தங்கம் மற்றும் சமரவீரவின் நேர்த்தியான வடிவமைப்பு அழகியலைப் பிரதிபலிக்கும் வகையில் அமையப்பெற்றன.
அவரது தொகுப்பு 100 க்கும் மேற்பட்ட ஃபேஷன் துறை வல்லுநர்கள் மற்றும் கூட்டாளர்களை ஈர்த்தது.
இதனையடுத்து வரலாற்றில் முதல்முறையாக பாரிஸ் ஃபேஷன் வீக்கில் இலங்கை வடிவமைப்பாளர் கலந்துகொண்டமைக்கு பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
அவரது சாதனையை "சர்வதேச ஃபேஷனில் இலங்கைக்கு ஒரு பெருமைமிக்க தருணம்" என்று தூதரகம் பதிவிட்டுள்ளது.
இது இலங்கையிலிருந்து உலக அரங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தை அவரது தொலைநோக்கு, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாக எடுத்துக்காட்டுகிறது எனலாம்.





