தமிழ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கும் நாட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் தொடர்பு உள்ளதா ?

 


இந்தியாவிலிருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களுக்கும் நாட்டில் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 
முன்னதாக அவர்கள் மூவரும் படகு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று சென்னை மண்ணடியில் தங்கியிருந்தபோது தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
 
இலங்கைக்கு வந்தவுடன் மூவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிபத்கொட மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது