தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம்

 

 































 தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம் இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் தர்மரெட்ணம் கிஷ்ணகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மனநல தினத்தை முன்னிட்டு, கவிதை,கட்டுரை,ஓவியம், பேச்சு, வினாடி- வினா போன்ற போட்டிகளும் தியானம் மற்றும் யோகாசப் பயிற்சிகள் இவ்வாரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.