பொருட்கள் கொள்வனவின்போது சொப்பிங் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி
முதல் இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் வகையில், நுகர்வோர் அலுவல்கள்
அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சொப்பிங் பைகளுக்கு
அறவிடப்படும் தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில்
குறிப்பிடப்பட வேண்டுமென அந்த வர்த்தமானியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சொப்பிங் பைகளின் விலை விற்பனை நிலையங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவின் போது, சொப்பிங்
பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை
வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக, சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட
பிரதிவாதிகளினால் நேற்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டது.