கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா தம்பதியினரின் மூத்த மகனான கிலசன் ஊடகத்துறையில் கொண்ட காதலால் 2016ம் ஆண்டிலிருந்து இன்று வரையில் அறிவிப்பாளராகவும் சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தாய் தந்தையினுடைய ஆசிகளோடும் துணைவி பவித்ராவின் ஒத்துழைப்போடும் ஆதவன் வானொலி, தாளம் எப்.எம், புன்னகை வானொலி, கனேடியத் தமிழ் வானொலி ஆகியவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியதோடு கல்முனை நெற் ஊடகத்தின் நெறியாளராகளும், பரிமாணம் பத்திரிகையின் இணையாசிரியராகவும் பணியாற்றி தற்போது ஸ்கை தமிழ் ஊடகத்தின் நிருபராகவும், துணிந்தெழு சஞ்சிகையின் இணையாசிரியராக இளங்கலைஞர்களை உலகறியச் செய்வதிலும் ஊடகத்துறையில் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற போதிலும் இவர் ஊடகத்துறையில் தனது பங்களிப்பை ஆற்றுவதற்காக சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த 2019 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிறந்த அறிவிப்பாளருக்கான தேசிய விருதும், 2022இல் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் சுவதம் விருதும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய உளநல தினத்தை முன்னிட்டு, மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வூட்டும் குறுநாடகம் இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
விஷ்ணு மகாவித்தியாலய அதிபர் தர்மரெட்ணம் கிஷ்ணகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மனநல தினத்தை முன்னிட்டு, கவிதை,கட்டுரை,ஓவியம், பேச்சு, வினாடி- வினா போன்ற போட்டிகளும் தியானம் மற்றும் யோகாசப் பயிற்சிகள் இவ்வாரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

.jpeg)






