பெண் பயிற்சி வைத்திய நிபுணரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபருக்கு பிணை.

 

 


 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் பயிற்சி வைத்திய நிபுணரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளிலும் வௌியில் செல்ல அனுமதிக்கப்பட்டார். சுமார் ஏழு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவரை, அனுராதபுரம் பிரதான நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் செல்ல அனுமதித்துள்ளார். பிணையாளர்களில் ஒருவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதவான், சாட்சிகள் அல்லது விசாரணைகளில் தலையிடக்கூடாது என்று சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார். மேலும் சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும்; தடை உத்தரவையும் பிறப்பித்தார்.